ஒருநாள் கிரிக்கெட்டில் நான் சேவாக்கின் சாதனையை முறியடிக்கனுன்னு முதலில் ஆசைப்பட்டவர் இவர்தான் – ரோஹித் ஓபன் டாக்

Rohith

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ள இவ்வேளையில் சமூக வலைதளம் மூலமாக தங்களது ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் குறித்த அனுபவத்தையும், தங்களது கருத்துக்களையும் அவர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவ்வப்போது சக வீரர்களுக்கு இடையே இன்ஸ்டாகிராமில் நேரலையில் உரையாடும் வீரர்கள் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

Rohith

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்ஸ்டாகிராமில் நேரலையில் பேசினார். அப்போது தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விடயங்களைப் பகிர்ந்து கொண்ட அவர் முதல் முறை இரட்டை சதம் அடித்த போது ஏற்பட்ட அனுபவத்தை அவருடன் பகிர்ந்தார்.

அதில் ரோஹித் கூறியதாவது : நான் முதல் முறை இரட்டை சதம் விளாசியபோது சேவாக்கின் அதிகபட்ச ஸ்கோர் சாதனையை தகர்க்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். மேலும் நான் 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் அடித்தேன். அப்போது நான் டிரெஸ்ஸிங் ரூம் திரும்பியபோது பலரும் சேவாக்கின் சாதனையை தகர்த்து இருக்கலாம் என்று கூறினார்கள்.

Rohith

ஆனால் யுவராஜ் ஒருவரே நீங்கள் 10 முதல் 15 ரன்கள் அடித்திருக்கலாம் உங்களால் நிச்சயம் சேவாக்கின் சாதனையை முறியடிக்க முடியும் என்று என்னிடம் கூறினார். மேலும் அவர் என் மீது நிறையவே நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் ரோஹித் கூறினார். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 200 ரன்களை விளாசி ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

- Advertisement -

பின்பு 2011 ஆம் ஆண்டு சேவாக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 219 ரன்கள் விளாசினார் அதன் பின்னர் 2013ம் ஆண்டு முதல் இரட்டை சதத்தை அடித்த ரோகித் அடுத்த ஆண்டே 2014 ஆம் ஆண்டு 264 ரன்கள் விளாசி ஷேவாக் சாதனையை முறியடித்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

நிச்சயம் ரோஹித்தின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோரான 264 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் முறியடிப்பது என்பது இயலாத காரியம் மேலும் தற்போதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிரடியை காட்டி வரும் ரோஹித் மேலும் சில இரட்டைசதங்களை விளாசுவார் என்பது மட்டும் உறுதி.