என்னை விட ஆட்டநாயகன் விருதுக்கு இவரே தகுதியானவர் – ரோஹித் சர்மா வெளிப்படை

Rohit Press
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த துவக்க வீரர் ரோஹித் சர்மா போட்டி முடிந்ததும் சிறப்பு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது :

rohith 1

- Advertisement -

எங்களுடைய இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. அதுவும் இதுபோன்று வெளிநாட்டு மைதானங்களில் கிடைக்கும் வெற்றி என்பது மிகவும் சிறப்பானது. தற்போது 2 க்கு 1 என்ற கணக்கில் நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளோம். இது முடிவு கிடையாது அடுத்தடுத்த போட்டிகளிலும் எங்களுடைய இந்த சிறப்பான ஆட்டம் தொடரும் என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எங்களுடைய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியை அணுகியதால் சிறப்பான வெற்றியை பெற்றோம். நிச்சயம் அடுத்த போட்டியிலும் எங்களால் வெற்றி பெற முடியும். இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

thakur 1

அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் ஜோ ரூட் விக்கெட் வீழ்த்தியது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. என்னை பொருத்தவரை ஷர்துல் தாகூர் விளையாடியது மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்ஸாக இருந்தது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் ஆட்டநாயகன் விருதுக்கு அவர் தகுதியானவர். முதல் இன்னிங்சில் அவர் செய்த பேட்டிங்கை நம்மால் மறக்க முடியாது. 31 பந்துகளில் 50 ரன்கள் அதுவும் வெளிநாட்டு மைதானத்தில் அடிப்பது என்பது சாதாரணமான விடயம் கிடையாது.

thakur 2

ஒவ்வொரு முறையும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது தனது பேட்டிங் திறமையை அவர் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். அதன்படியே தற்போது படிப்படியாக தனது பேட்டிங் திறமையை நிரூபித்து வருகிறார். அது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார் என ஷர்துல் தாகூரை பாராட்டி ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement