2 சிக்ஸர் நான் அடித்தாலும் உண்மையில் இந்திய அணிக்கு இவராலே வெற்றி கிடைத்தது – உண்மையை உடைத்த ரோஹித்

Rohith-3
- Advertisement -

ஹமில்டன் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி ரசிகர்களுக்கு மிகவும் திரில்லான போட்டியாக அமைந்தது. முகமது ஷமி வீசிய இருபதாவது ஓவரில் போட்டி டையாக அடுத்து நியூசிலாந்து சூப்பர் ஓவரில் 17 ரன்கள் குவித்தது. 18 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி முதல் 4 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே அடித்தது.

Rohith-2

இதனால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டதால் போட்டியில் பரபரப்பு உண்டானது. இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்த அந்த சமயத்தில் ரோகித் சர்மா தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை விளாசி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் மூலம் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் 19 ஓவரில் பும்ரா 11 ரன்கள் வீட்டு கொடுக்க கடைசி ஓவரில் 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. அப்போது முகமது சமி வீசிய பந்தில் டெய்லர் சிக்ஸர் ஒன்றை அடிக்க 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிமையான நிலைமையில் இருந்து ஷமி சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை டை ஆக்கினார். அதன் பின்னர் ரோகித் சர்மா வெற்றி பெற வைத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் இந்த போட்டி குறித்து ரோகித்சர்மா செய்துள்ள ட்வீட்டில் இது உண்மையில் சிறப்பான போட்டி முகமது ஷமி அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்துள்ளார். அதேபோன்று வில்லியம்சன் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரோஹித்தின் இந்த டிவீட்டிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement