வீரர்களை மாற்றாமல் அதே அணியுடன் இன்றைய போட்டியில் விளையாட இதுவே காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

Rohith-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது ராஜ்கோட் மைதானத்தில் துவங்கியுள்ளது. அதன்படி டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானம் செய்தார்.

Toss

டாஸ் வென்ற பிறகு பேசிய ரோகித் சர்மா இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. டெல்லி போட்டியில் விளையாடிய அதே அணி விளையாடுகிறது என்று குறிப்பிட்டார். மேலும் அதற்கான காரணத்தையும் அவர் அந்த பேட்டியின்போது தெரிவித்தார். அதன்படி ரோஹித் கூறியதாவது : டெல்லி போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்த அந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது உண்மை தான் இருப்பினும் வீரர்களிடம் எந்த குறையும் இருப்பதாக நான் கருதவில்லை. எனவே அதே அணியுடன் இன்றைய போட்டியில் நான் களமிறங்க உள்ளேன் என்று அவர் தெரிவித்தார். அதன்படி தற்போது பங்களாதேஷ் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.