தொடரை வென்று கொடுத்துவிட்டேன். இனி கோலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் தான் தலைவலி – ரோஹித் பேட்டி

Rohith-2
- Advertisement -

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் ராகுல் மற்றும் ஐயர் ஆகியோர் உதவ, பந்து வீச்சாளரான தீபக் சாஹர் 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணியை எளிதாக வெற்றி பெற வைத்தது என்று கூறலாம்.

Ind

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் கூறியதாவது : இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் தான் இந்திய அணி வெற்றிக்கு முக்கிய காரணம் என்று பாராட்டினார். மேலும் அதனை தொடர்ந்து அவர் தற்போது இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

இந்த போட்டியை போன்றே எல்லா போட்டியிலும் இந்திய அணி இதே மாதிரி சிறப்பான ஆட்டத்தை தொடருமாயின் ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் எந்தெந்த வீரரை தேர்வு செய்வது என்ற தலைவலி கோலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் மற்றும் தேர்வுக் குழுவிற்கு ஏற்படும் என்றும் ரோஹித் கூறினார்.

Ind

ஏனெனில் யாரை எடுப்பது யாரை விடுவது என்று தெரியாத அளவிற்கு இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் என்று குறிப்பிட்டு ரோஹித் பேசினார். இருப்பினும் தற்போது வரை இந்திய அணியின் மிடில் ஆர்டர் சரியான முறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement