ப்ளீஸ் அவரோட வச்சி என்ன கம்பேர் பண்ணாதீங்க. அவர் வேற லெவல் லெஜண்ட் – ரோஹித் அதிரடி

Rohith
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரரான மகேந்திர சிங் தோனி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஓய்வுபெறும் கடைசி கட்டத்தில் இருக்கும் இவருக்கு அடுத்து யார் இவரது இடத்தை நிரப்பப் போகிறார்கள் என்ற கேள்வி தான் மிகப் பெரிய விடயமாக தற்போது பார்க்கப்படுகிறது. மேலும் பிசிசிஐ தோனிக்கு மாற்று வீரரை தீவிரமாக தேர்வு செய்து தேர்வு செய்ய மும்முரம் காட்டி வருகிறது.

Dhoni

அவரது இடத்தை நிரப்புவது என்பது எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஒரு கீப்பராக, ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு கேப்டனாக மூன்றுவித வேலையையும் சிறப்பாக செய்து வந்தவர் தோனி. அவரது இடத்தை நிரப்ப வேண்டுமானால் அது ஒரு அதி திறமை வாய்ந்த வீரரால் மட்டுமே முடியும். அந்த அளவிற்கு தோனி இந்திய அணிக்காக பங்காற்றியுள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் அவரது இடத்தை நிரப்புவதற்காக ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், விருத்திமான் சஹா என பலரும் பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் பெரிதாக யாரும் தோனியை ஞாபகப்படுத்த வில்லை. இந்நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னா தோனி செய்த கேப்டன்ஷிப் போல் அடுத்து யார் கேப்டனாக வருவார்கள் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
Rohith

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தோனி செய்தது போல் அடுத்து ரோகித் சர்மா தான் அவரைப் போன்று செயல்படுவார். நான் அவரை பல வருடங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். அமைதியாக அனைத்தையும் பார்க்கிறார், கவனிக்கிறார், கேட்கிறார், களத்தில் ஒரு கேப்டனாக தேவையான நம்பிக்கையை கொடுத்து அணியை முன்னின்று நடத்துகிறார்.

மேலும் இதைத்தான் தோனியும் கேப்டனாக இருக்கும் போது செய்தார். அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் கேப்டன் தான் என்று நினைக்கிறார் ரோகித் சர்மா. இதனை நான் வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது பார்த்தேன் என்று சுரேஷ் ரெய்னா கூறினார். ஏற்கனவே ரோஹித்தின் ஐபிஎல் கேப்டன்ஷிப் குறித்து ரெய்னா பெருமையாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

CskvsMi

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கூறிய இந்த கருத்து குறித்து ரசிகர் ஒருவர் ரோஹித்திடம் கேள்வி எழுப்ப அதற்கு பதிலளித்த ரோகித் : தோனி வேறு மாதிரி என்றும் அவருடன் யாரையும் கம்பேர் செய்ய முடியாது என்றும் அவர் கூறி உள்ளார். மேலும் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இந்திய அணி வீரர்களின் பலம் பலவீனத்தை பற்றியும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Advertisement