ராகுல் மற்றும் பாண்டியா விதவிதமாக ஹேர் ஸ்டைல் வைக்க இதுதான் காரணமாம் – ரகசியத்தை வெளியிட்ட ரோஹித்

Rohith

இந்திய அணியின் இளம் வீரர்களான ராகுல் மற்றும் பாண்டியா ஆகியோர் சென்ற ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் கலந்துகொண்டு பெண்கள் தொடர்பான சர்ச்சையான கருத்துக்களை பேசியதால் இந்திய அணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு மீண்டும் அணிக்குத் திரும்பினார்கள். இருப்பினும் அதன்பிறகும் அவர்கள் இருவரும் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

Rahul 1

மேலும் கிரிக்கெட்டை தாண்டி தங்களது ஹேர் ஸ்டைல் மற்றும் டேட்டூஸ் என அவர்கள் செய்யும் ஒவ்வொரு வெளிக்காட்டும் ஒவ்வொரு விடயத்தையும் ரசிகர்கள் விரும்புகின்றனர். மேலும் ஒவ்வொரு தொடருக்கும் புதிதாக ஹேர் ஸ்டைல், டாட்டூ என மிளிரும் இவர்கள் அடிக்கடி தங்களது ஹேர்ஸ்டைலை மாற்றுவதற்கான காரணத்தை இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் இணையத்தில் அளித்துள்ள பேட்டியில் கூடியதாவது : இந்திய அணியில் ராகுல், பாண்டியா மற்றும் ஐயர் போன்றோர் ஆட்டத்தில் தங்களது திறமையை காண்பிப்பது மட்டுமின்றி தங்களது உடலில் உள்ள மாற்றங்களையும் ரசிகர்களுக்கு காண்பிக்க விரும்புகின்றனர். மேலும் இளம் வீரர்கள் ஆகிய அவர்கள் மிகப்பெரிய ஃபுட்பால் ரசிகர்கள். பெரும்பாலும் ஃபுட்பால் போட்டிகளை அனைத்தையும் பார்க்கும் பழக்கம் உடையவர்கள்.

அப்படி ரசிகர்களை கவரும் பிரபல ஃபுட்பால் வீரர்கள் வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் போன்றவற்றை ஃபாலோ செய்து அதனைப் போன்றே ஒவ்வொரு தொடரிலும் புதுபுதுசாக ஹேர் ஸ்டைல் வைக்கிறார்கள். மேலும் இதனை வாடிக்கையாக வைத்திருப்பது ராகுல் மற்றும் பாண்டியா என்று ரோகித் குறிப்பிட்டுள்ளார். ஃபுட்பால் வீரர்கள் ஆட்டத்தை தாண்டி தங்களது உடல் மாற்றங்கள் மூலம் ரசிகர்களை கவர்வதால் அவர்களை போன்றே இவர்களும் செய்து வருகின்றனர்.

- Advertisement -

இவர்கள் அதையே பார்த்து அவர்களைப் போன்றே நாம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்களுக்கு காட்சியளிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் விதவிதமான ஹேர் ஸ்டைல் மற்றும் டேட்டூ என கிரிக்கெட் மைதானத்தில் வலம் வருகின்றனர். இருந்தாலும் இவர்கள் மிகவும் திறமையான வீரர்கள் என்பதால் அவர்கள் அதனை வெளிப்படுத்துவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நான் கருதுகிறேன் என்று ரோஹித் கூறியது குறிப்பிடத்தக்கது.