இவர் ரன் அவுட்டானால் நான் இரட்டைசதம் அடிப்பேன். எனக்கு இப்படி ராசி இருக்கு – ரோஹித் ஓபன் டாக்

Rohith

இந்திய அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. துணை கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. இந்த இருவரும் சேர்ந்து இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் தர வரிசையில் விராட்கோலி முதல் இடத்திலும் ரோகித் சர்மா இரண்டாம் இடத்திலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர். இந்த இருவரும்தான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையின் மிகப் பெரிய தூண்கள்.

Rohith

எப்படிப்பட்ட போட்டிகளும் இருவரில் யாராவது ஒருவர் சதம் அடித்து விடுவார்கள். அந்த அளவிற்கு திறமை வாய்ந்தவர்கள். இதில் குறிப்பாக ரோகித் சர்மா மிகப்பெரிய சதத்திற்கு பெயர் போனவர். ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வ சாதாரணமாக மூன்று முறை இரட்டை சதம் விளாசியுள்ளார். ஆனால் இப்படி தான் இரட்டை சதம் அடிப்பதில் ஒரு விசித்திரமான ராசி தனக்கு இருப்பதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன் பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : விராட் கோலியும் நானும் பேட்டிங் பிடித்துக்கொண்டிருந்த போது இரண்டு முறை அவர் ரன் அவுட் ஆகி வெளியேறினார். நான் 264 ரன்கள் விளாசிய போதும் கோலி ரன் அவுட் ஆனார் .அதே நேரத்தில் பெங்களூரு போட்டியில் இரட்டை சதம் விளாசினேன். அப்போதும் தெரியாத்தனமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார் .

Rohith-2

இப்படி கோலி விரைவாகத் தனது விக்கெட்டை இழந்து வழியே வெளியேறி விட்டால் எனக்கு கூடுதல் சுமைதான். நன்றாக ஆடும் வீரர்கள் துரதிர்ஸ்டவசமாக தங்களது விக்கெட்டுகளை இழந்தால் அதனை நான் ஈடுகட்ட வேண்டும். அதை வேறு ஒருவர் பார்த்துக் கொள்வார் என்றெல்லாம் விட முடியாது.

- Advertisement -

அதேநேரத்தில் விராட் கோலி ரன் அவுட் ஆகும் போதெல்லாம் நான் இரட்டை சதம் விளாசியுள்ளேன். இதில் எனக்கு ஒரு வித்தியாசமாக ராசியாக இருந்து உள்ளது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா, தனது கிரிக்கெட் வாழ்வின் துவக்கத்தில் இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் ஆடிவந்த ரோஹித் சர்மாவால் சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாக செயல்பட முடியவில்லை.

Rohith

ஆனால் 2013 ஆம் ஆண்டு தோனி வீரருக்கான வாய்ப்பினை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரோஹித் சர்மா மளமளவென ரன்களை குவித்துவருகிறார். அதுமட்டுமின்றி சர்வதேச அரங்கில் மிகப்பெரிய சதங்களையும் அவர் விளாசி வருகிறார். சமீபத்தில் டெஸ்ட் போட்டியிலும் துவக்கவீரர் வாய்ப்பினை பெற்ற ரோஹித் போட்டிகளிலும் தனது வேட்டையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.