ரோஹித் ஐ.பி.எல் முடிஞ்சி இந்தியா திரும்ப இதுவே உண்மை காரணம் – வெளியான உறுதி தகவல்

Rohith
- Advertisement -

13வது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆவது முறையாக கோப்பையை வென்றது. கோப்பையை வென்ற கையோடு மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு நாட்கள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் இந்தியா திரும்பி விட்டார்கள் .ஆனால் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்திற்கு தயாராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விட்டனர்.

Rohith

- Advertisement -

டெஸ்ட் அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு செல்லாமல் இந்தியாவிற்கு திரும்பி விட்டார். அங்கு இருந்து ஆஸ்திரேலியாவிற்கு செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் துரதிஸ்டவசமாக அவரது தந்தைக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் தற்போது வரை இந்திய அணியில் இணைவாரா இல்லையா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஒரு கட்டத்தில் அவர் டெஸ்ட் தொடர் துவங்குவதற்கு மூன்று நாட்கள் முன்னரே வந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கண்டிப்பாக டெஸ்ட் தொடரில் இடம் இல்லை அவ்வளவுதான் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

Rohit-Sharma-and-his-father

இதற்கு உண்மையான காரணம் என்னவென்றால் அவரது தந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது. இதன் காரணமாக அவரை கவனித்துக்கொள்ளவே ரோஹித் நாடு திரும்பினார். இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே இன்னும் அவர் ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேரவில்லை. இதற்கு முன்னதாகவே அவர் ஐபிஎல் தொடரின்போது காயத்தில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rohith

மேலும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரிடம் பிடித்து இருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அவருக்கு இடம் இல்லை. எப்படி பார்த்தாலும் ஆஸ்திரேலிய தொடர் முழுக்க ரோகித் சர்மா ஆடுவது சந்தேகத்திற்கு இடமாக உள்ளது இதனால் அவரது ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்து இருக்கின்றனர்.

Advertisement