தானாக முன்வந்து வாயை கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட ரோஹித் – விவரம் இதோ

Rohith-1

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரரான ரோகித் சர்மா உலக கோப்பை தொடர் முதல் தனது உச்சகட்ட பார்மில் உள்ளார். உலக கோப்பை தொடரில் சதங்கள் அடித்து விளாசிய அவர் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துவக்க வீரராக களமிறங்கி அந்த தொடரிலும் சதங்களை விளாசினார்.

rohith

ரோகித் சர்மா இந்த ஆண்டு முழுவதும் நல்ல பார்மில் இருந்தாலும் கடந்த ஓராண்டில் மட்டும் ஓய்வில்லாமல் ஐபிஎல் உட்பட 60 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார். அதனால் அவருக்கு ஓய்வு தேவை என்று நினைத்த இந்திய அணி நிர்வாகம் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டது.

ஆனால் தனக்கு ஓய்வு வேண்டாம் என்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நான் விளையாட விரும்புகிறேன் என்றும் அவராகவே முன்வந்து வாய்ப்பைப் பெற்றார். ஆனால் தற்போது நடைபெற்று முடிந்த முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார் ரோஹித் அதிலும் குறிப்பாக தற்போது நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 18 பந்துகளை சந்தித்த ரோஹித் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். முதல் போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Rohith

கடைசியாக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகளிலும் அவர் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் பணிச்சுமையை வெளிக்காட்டும் விதமாக உள்ளதால் தானாகவே வாயை கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளார் என்பது போல தெரிகிறது. மேலும் ரோகித்திற்கு தற்போது ஓய்வு தேவைப்படுகிறது என்றும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து திறமையை சோதிக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்துகளை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -