தோனி சொல்லியும் நான் கேக்கல. நான் முதல் இரட்டைசதம் அடித்தபோது தோனி என்னிடம் கூறியது இதுதான் – ரோஹித் ஓபன் டாக்

ரோகித் சர்மா இந்திய அணிக்காக கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார். துவக்க காலத்தில் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லாமல் இருந்தவர். ஆனால் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி இவரை துவக்க வீரராக களமிறக்கினார். அப்போது முதல் தற்போது வரை அடித்து துவம்சம் செய்து வருகிறார் ரோஹித் சர்மா. மேலும் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை துவக்க வீரராக இரட்டை சதம் விளாசியுள்ளார்.

Rohith

இதுவரை சர்வதேச அரங்கில் 3 இரட்டை சதம் யாராலும் தற்போது வரை அடிக்கப்படவில்லை. இந்நிலையில் 2013ம் ஆண்டு தான் முதன் முதலில் இரட்டை சதம் விளாசிய போது தோனி தனக்கு என்ன அறிவுரை கூறினார் என்பதை பற்றி தெரிவித்துள்ளார் ரோகித் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில் : இலங்கைக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைக்கவில்லை.

அந்த போட்டியின் போது ஷிகர் தவான், விராட் கோலி, யுவராஜ்சிங் என அனைவரும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவுடன் சேர்ந்து நிதானமாக ஆடினேன். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தோம். அதன்பின்னர் ரெய்னா ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் கேப்டன் தோனி களத்திற்குள் வந்தார். நாங்கள் இருவரும் ஆடிக்கொண்டிருக்கும் போது தோனி என்னிடம் அடிக்கடி வந்து அறிவுரை கூறிக் கொண்டே இருப்பார்.

Rohith

நீ துவக்கத்திலிருந்தே ஆடுகளத்தில் இருக்கிறாய், கடைசி வரையில் நீ இருக்கவேண்டும். தற்போது எந்த பந்து வீசினாலும் உன்னால் அடிக்க முடியும். அதனால் நீ நிலைத்து நின்று ஆட வேண்டும் பந்தை அடித்து ஆடும் பொறுப்பை நான் எடுத்துக் கொள்கிறேன் நீ பொறுமையாக விளையாட வாய்ப்பு கிடைத்தால் பவுண்டரி விளாசி விடு என்று அறிவுரை கூறினார்.

- Advertisement -

ஆனால் நான் அவர் சொல்வதை கேட்கவே இல்லை எனக்கு வந்த பந்துகளை எல்லாம் சிக்சர் பவுண்டரி விளாசி தள்ளினேன் என்று கூறினார் ரோகித் சர்மா. அதேபோல் அந்த போட்டியில் 158 பந்துகளில் 208 ரன்கள் விளாசினார் ரோஹித். மேலும் 49.3 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதேபோன்று அடுத்த இருமுறைகளும் தொடர்ந்து தான் அதிரடியாக ஆடியதாலேயே இதனை செய்ய முடிந்தது என்று ரோஹித் கூறினார்.

Rohith

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வீட்டில் முடிங்கியுள்ள இந்திய வீரர்கள் இந்த ஓய்வு நேரத்தில் சமூக வலைத்தளம் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது அஷ்வினுடன் நேரலையில் உரையாடிய ரோஹித் இந்த விடயங்களை பகிர்ந்து குறிப்பிடத்தக்கது.