6 ஆண்டுகள் கழித்து விசித்திரமான சாதனையை நேற்றைய போட்டியில் படைத்த ரோஹித் – என்ன தெரியுமா ?

Rohith-2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்ய இந்திய அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. சென்ற போட்டியைப் போலவே ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து 126 ரன்களை குவித்தனர்.

Rahul

- Advertisement -

145 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 83 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த போட்டியில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சரை ரோகித் சர்மா அடித்ததோடு நேற்றைய போட்டியில் ஆறு வருடம் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி விட்டு சென்றுள்ளார்.

அந்த சாதனை சிலருக்கு விசித்திரமாக தோன்றலாம் ஆனால் அதுவே அதுவே உண்மை. அதாவது 2015 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அயல்நாட்டு மண்ணில் அடித்த அரைசதத்தை தவிர மற்றபடி பெரிய ரன்களை குவிக்கவில்லை. அதனை தொடர்ந்து தற்போது தான் அதிகபட்ச ரன்களாக ரோகித் சர்மா இந்த 83 ரன்களை குவித்துள்ளார்.

rohith 1

டெஸ்ட் அரங்கில் அவர் அடித்த பெரும்பாலான ரன்கள் இந்தியாவில் வந்துள்ள நிலையில் தற்போது இங்கிலாந்து மைதானத்தில் அவர் 83 ரன்கள் குவித்து அயல்நாட்டு மண்ணில் குவித்த அதிகபட்ச ரன்களாக தற்போது பதிவு செய்துள்ளார். மறுபுறம் நிதானமாக விளையாடிய கே எல் ராகுல் சதம் விளாசி 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி அங்கு 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை குவித்துள்ளது. இன்று இரண்டாம் நாளில் மேலும் ரன்களை குவித்து 350 – 400 ரன்களை இந்திய அணி சேர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு இந்த போட்டியிலும் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement