11 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரோஹித் ராகுல் துவக்க ஜோடி – அப்படி என்ன சாதனை தெரியுமா ?

Rahul
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடியவடைய இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆனது தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

indvseng

- Advertisement -

அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதத்தை கடந்த ரோஹித் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேற ராகுல் ஒருபுறம் 127 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் ரோகித் மற்றும் ராகுல் ஆகியோரது ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 ஆண்டு கால சாதனையை முறியடித்தது. அதன்படி அந்த சாதனை யாதெனில் இதற்கு முன்னர் 2010ஆம் ஆண்டு ஆசியாவிற்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்திருந்தது.

rahul 1

அதனை தொடர்ந்து நேற்றைய போட்டியில் தான் 11 ஆண்டுகள் கழித்து ஆசிய கண்டத்திற்கு வெளியே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது முதல் விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை ரோஹித் ராகுல் ஆகியோரது ஜோடி செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement