சென்னை டெஸ்ட் போட்டி : பயிற்சிக்கு சென்னைக்கு வந்தடைந்த 3 இந்திய வீரர்கள் – விவரம் இதோ

Practice

இந்திய அணி அண்மையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மிக நீண்ட தொடரில் விளையாடிய பின்னர் தாயகம் திரும்பியது. அதேபோன்று தற்போது இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால் தற்போது வீரர்கள் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதில் முதல் கட்டமாக மும்பையைச் சேர்ந்த ரோகித் சர்மா, ரஹானே, மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் நேற்று சென்னை வந்தடைந்தனர்.

இவர்கள் மூவரும் மும்பையில் இருந்து ஒன்றாக சென்னைக்கு வந்து தற்போது ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள். பின்பு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பயிற்சியில் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று இலங்கையில் இருக்கும் இங்கிலாந்து வீரர்களும் சென்னைக்கு இன்று வருகின்றனர். மேலும் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக வரும் வீரர்களும் சென்னைக்கு வந்து தனிமைப் படுத்திக் கொள்வார்கள்.

Rohith

அதேபோன்று மற்ற இந்திய அணி வீரர்களும் சென்னைக்கு வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திய பின்பு பயிற்சியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து பிசிசிஐ முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் : இரு அணி வீரர்களும் சென்னையில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் தங்க வைக்கப்படுகிறார்கள். மேலும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு அவர்களை அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம்.

- Advertisement -

Rohith

பின்பு இரு அணியை சேர்ந்த வீரர்களும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் பயிற்சியை தொடங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை முதல் போட்டி மற்றும் 13 ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை இரண்டாவது போட்டி என இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை மைதானத்தில் நடைபெற உள்ளன. மீதமுள்ள இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.