பவுலர்களை மிரட்டும் இதுபோன்ற ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணிக்கு தேவை – இளம்வீரரை புகழ்ந்த ரோஹித்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 205 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அடுத்ததாக இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் மட்டும் சிறப்பாக விளையாடிய நிலையில் கில், புஜாரா, கோலி, ரஹானே என அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஒரு கட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 80 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

Rohith

- Advertisement -

அப்போது இந்திய அணியால் இங்கிலாந்து அணி அடித்த 205 ரன்களையாவது அடிக்க முடியுமா ? என்ற நிலைமை இருந்தது. அந்த வேளையில் தான் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். களம் இறங்கியது முதல் பொறுமையாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து இந்திய அணி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை நெருங்கி செல்ல செல்ல தனது அதிரடியை காண்பித்தார். இறுதியில் 118 பந்துகளை எதிர்கொண்ட அவர் 13 பவுண்டரி 2 சிக்சர்கள் என 101 ரன்கள் எடுத்து தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா கூறுகையில், ரிஷப் பண்ட் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இதன் காரணமாக புஜாராவிடம் பொறுமையாக ஆடும்படி கூறினேன். ஆனால் அவர் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

pant 1

அதன்பின்னர் ரிஷப் பண்ட் நெருக்கடியில் களம் இறங்கினாலும் அவர் தனது தன்னுடைய மறுபக்கத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். எப்பொழுதும் அதிரடியாக விளையாடிய கூடிய இவர் நேற்றைய போட்டியின் துவக்கத்தில் நிதானமாக விளையாடி கடைசியில் அதிரடி காட்டினார். இந்த இன்னிங்ஸ் நிச்சயம் அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ் ஆக இருக்கும்.

- Advertisement -

மேலும் இந்திய அணி நிர்வாகமும் அவரிடம் இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியம் என்று கூறியது. அதனை உணர்ந்து விளையாடிய அவர் சிறப்பாக தனது வேலையை செய்து முடித்துவிட்டார். இந்திய அணி 200 ரன்கள் எட்டும் வரை பொறுமையாக காத்திருந்து அவர் பின்னர் அதிரடியில் வெளுத்து வாங்கினார் என்று ரோஹித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பவுலர்களை விரட்டக்கூடிய இப்படி ஒரு திறமையான வீரர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்.

Pant

பண்ட் நிதானம் மற்றும் அதிரடி என இரண்டையும் கடைபிடிப்பது சிறப்பாக இருக்கிறது. அவர் சிலவேளைகளில் தவறான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தால் அவரை கடுமையாக விமர்சிக்க கூடாது. நிச்சயம் இந்திய அணிக்கு அவரால் நல்ல பங்களிப்பை வழங்க முடியும் என்று ரோஹித் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement