நான் இந்திய அணிக்காக மட்டும் சிறப்பாக விளையாடவில்லை. இதற்காகவும் தான் சேர்த்து ஆடுகிறேன் – ட்வீட்டிய ரோஹித்

Rohith-2
- Advertisement -

இந்திய அணியின் உலக கோப்பை தோல்விக்கு பின் கேப்டன் கோலி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தகவல் வெளியாகியது. அதோடு ரோகித் இன்ஸ்டாகிராமில் இருந்து கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்வதை நிறுத்தினார். எனவே இருவருக்கும் மோதல் இருப்பது உறுதியானது என்று செய்திகள் பரவின.

Rohith

- Advertisement -

இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்கு முன் கோலியிடம் பத்திரிகையாளர்கள் ரோகித் சர்மா குறித்து கேள்வி கேட்க அதற்கு பதிலளித்த கோலி : எங்களுக்குள் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை. மேலும் ஓய்வறையில் நல்ல சூழலே நிலவுகிறது.

நான் ரோஹித்துடன் நல்ல நட்பில் உள்ளேன். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அதை என் முகத்திலும், என் செயல்பாடுகளில் நீங்கள் அதை எளிதில் காணமுடியும். நான் எப்பொழுதும் ரோஹித்தை பாராட்டியே உள்ளேன். அவர் சிறந்த குணம் உடையவர் என்று கூறினார். இந்நிலையில் ரோகித் சர்மா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை செய்துள்ளார். அதி அவர் குறிப்பிட்டதாவது :

அதில் அவருடைய புகைப்படத்தை பதிவிட்டு நான் எனது அணிக்காக மட்டும் விளையாடவில்லை இந்திய நாட்டிற்காகவும் விளையாடுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் கோலி மற்றும் ரோஹித் இடையே ஏற்பட்ட பிளவு குறித்து தற்போது ரோகித் மறைமுகமாக தனது மவுனத்தை கலைத்து உள்ளதாக தெரிகிறது.

Advertisement