என்னது கோலி ரோஹித் இடையே சண்டையா ? – இந்த வீடியோவை பாருங்க அவங்க எவ்ளோ ஜாலியா இருக்காங்க

- Advertisement -

சமீபத்தில் இந்திய அணி குறித்து பரபரப்பாக பேச வைத்த விடயங்களில் ஒன்று யாதனில் ரோகித் சர்மா மற்றும் கோலி ஆகியோருக்கு இடையேயான சண்டை மற்றும் பிரச்சனை தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் நல்ல நட்பு உள்ளது என்பதை கோலி ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்து இருந்தார்.

Rohith

- Advertisement -

இந்நிலையில் அதனை வெளிக்காட்டும் விதமாக தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது என்னவெனில் ஜடேஜா மற்றும் புரோகித் ஆகியோர் ஹெட்ஸ் அப் சேலஞ்ச் என்ற ஒரு சிறிய போட்டி ஒன்றினை செய்கின்றனர். அதில் ஜடேஜா நடித்துக் காட்ட ரோகித் சர்மா சரியாக கண்டுபிடிக்க வேண்டும் அதுவே அந்த போட்டி.

முதலில் நடித்து காட்டிய பும்ரா பெயரை ரோஹித் எளிதாக கண்டுபிடித்தார். அடுத்து விராட் கோலியின் பெயரை கண்டுபிடிக்க ரோஹித் சற்று சிரமப்பட்டாலும் கோலி போலவே ஜடேஜா செய்கை செய்து காண்பிக்க உடனே கோலியின் பெயரை ரோஹித் கண்டுபிடித்தார்.

உடனே அருகில் இருந்த கோலி, ஜடேஜா மற்றும் ரோஹித் ஆகியோர் மகிழ்ச்சியுடன் ஜாலியாக பேசிக்கொண்டனர். இந்த வீடியோவின் மூலம் ரோகித் மற்றும் கோலி இடையே நல்ல உறவு நீடிக்கிறது என்பதை இந்த செயல் வெளிக்காட்டியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement