3 வருஷத்துக்கு முன்னாடியே நான் இதை பாத்துட்டேன். கொல்கத்தாவுல திருப்பி அடிப்பேன் – ரோஹித் உறுதி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற உள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த போட்டி குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அணியின் டி20 கேப்டன் ரோகித் சர்மா பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : கொல்கத்தா டெஸ்ட் போட்டி சவாலான ஒன்றாக இருக்கும்.

ஏனெனில் பிங்க் பால் கொண்டு இந்திய அணி சர்வதேச போட்டியில் விளையாடுவது இதுவே முதல் முறை. மேலும் பகலிரவு போட்டி என்பதால் ஸ்விங் மற்றும் வேகம் எவ்வாறு அமையப் போகிறது என்பதுதான் எங்களுடைய முதல் சவாலாக இருக்கும். நான் ஏற்கனவே பிங்க் பந்தில் விளையாடி உள்ளேன். துலீப் டிராபி போட்டிகளில் மூன்று வருடங்களுக்கு முன்னால் 2016ல் நான் பிங்க் பந்துகளில் விளையாடி உள்ளேன்.

Rohith

ஆனால் அப்பொழுது பின்வரிசையில் ஆடிவந்தேன் ஆனால் இப்போது டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களம் இறங்குவதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வேன் மேலும் நீண்ட காலமாக காத்திருந்தேன் தற்போது தான் இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனவே பிங்க் பந்தில் என்னுடைய திறமையை நிரூபித்து சிறப்பாக விளையாடுவேன். மேலும் அடுத்த நியூஸிலாந்து தொடருக்கு முன்னர் இதுபோன்ற சவாலான போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் ரோஹித் கூறினார்.

- Advertisement -