இந்திய அணியுடன் இணைந்து ஆஸ்திரேலியா பயணிக்கும் ஹிட்மேன் ரோஹித் – ரசிகர்களுக்காக வெளியான நற்செய்தி

Rohith

இந்த ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலிய நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஏற்கனவே பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

INDvsAUS

இந்த தொடரானது நவம்பர் 27ஆம் தேதி துவங்கி ஜனவரி மாதம் பாதியில் முடிவடைகிறது. இந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக ரோகித் சர்மா எந்த ஒரு பார்மேட்டிலும் பிசிசிஐ சேர்க்கவில்லை.

இதனால் ரோஹித்தின் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். மேலும் அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். காயம் இருந்திருந்தால் ரோகித் எவ்வாறு மீண்டும் விளையாடுகிறார் என்று கேள்வி சமூகவலைதளத்தில் பலமாக இருந்தது.

rohith 2

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய பயணிக்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா இடம் பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தற்போது காயத்தில் பிடியில் இருந்து வெளிவந்த ரோஹித் மும்பை அணிக்காக விளையாடி வருவதால் அவரது உடல்நிலை குறித்து கூடிய விரைவில் இந்திய அணி இறுதி முடிவு எடுப்பார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

rohith 1

அதனை இந்திய அணியின் பிசியோ மருத்துவர் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் சேர்ந்து எடுக்க உள்ளனர். மேலும் தொடர் கண்காணிப்பில் இருக்கும் ரோஹித் இந்த தொடரின் முடிவில் அவர் காயம் குறித்த ஒரு தெளிவு கிடைக்கும். அப்போது அவர் அணியில் சேர்ப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.