3 ஆவது ஒருநாள் போட்டி : 3 அதிரடி மாற்றங்களை செய்த கேப்டன் ரோஹித் சர்மா – டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ind
Advertisement

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக அகமதாபாத் மைதானத்தில் மட்டுமே இந்த மூன்று ஒருநாள் போட்டிகளும் நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி முதலாவது ஒருநாள் போட்டியும், பிப்ரவரி 9-ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்தது.

Cup

அதன்படி நடைபெற்று முடிந்த முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது 2 க்கு 0 என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

சில நிமிடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு விளையாடாததால் நிக்கலஸ் பூரன் கேப்டனாக செயல்படுகிறார். டாசில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய ரோகித் :

Iyer

3 வீரர்கள் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக 3 புதிய வீரர்களை அணியில் இணைந்துள்ளனர் என்று அறிவித்தார். அதன்படி இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளதால் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக தவான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் அணியில் இணைந்துள்ளனர்.

- Advertisement -

மற்றபடி சுழற்பந்து வீச்சாளர் சாஹலுக்கு இந்த மூன்றாவது போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு அவருக்கு பதிலாக அணியில் நீண்ட நாட்களாக வாய்ப்புக்கு காத்திருந்த குல்தீப் யாதவ்-க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குல்தீப் யாதவ் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாய்ப்பினை பெற்றுள்ளதால் இந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்படுவாரா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : திட்டமிட்டே அவரோட டெஸ்ட் கேரியரை முடிச்சிட்டாங்க. இதெல்லாம் பி.சி.சி.ஐ செய்யும் அரசியல் தான் – சையத் கிர்மானி

1) ரோஹித் சர்மா, 2) ஷிகர் தவான், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) ரிஷப் பண்ட், 6) சூரியகுமார் யாதவ், 7) வாஷிங்க்டன் சுந்தர், 8) ஷர்துல் தாகூர், 9) முகமது சிராஜ், 10) குல்தீப் யாதவ், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement