யுவராஜ் சிங்கின் சாதனையை இன்று தாண்ட உள்ள ஹிட்மேன் ரோஹித் – சூப்பர் ரெக்கார்ட்

Rohith
- Advertisement -

இந்தியா தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா புதிய சாதனையை படைக்க உள்ளார்.

Rohith

- Advertisement -

இன்று அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா இந்திய அணி சார்பாக அதிக ஒருநாள் ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் தற்போது ஏழாம் இடத்தில் உள்ளார். மொத்தம் 217 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 8676 ரன்களை குவித்துள்ளார்.

இன்னும் ரோகித் சர்மா 26 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இவருக்கு முன்னதாக இருக்கும் யுவராஜ்சிங் (8701 ரன்கள் 304 ஒருநாள் போட்டிகள்) சாதனையை இன்று ரோகித் சர்மா கடக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய அணி சார்பாக ஏழாவது இடத்தை பிடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு பிரகாசமாக உள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் கண்டிப்பாக இந்த சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rohith

இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும்(18426), இரண்டாவது இடத்தில் கோலி(11406), அதற்கடுத்து முறையே கங்குலி(11363), டிராவிட்(10889), தோனி(10773), அசாருதீன்(9378) ஆகியோர் அடுத்தடுத்து இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement