டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சு தேர்வு. இந்திய அணியில் ஒருமாற்றம் – விவரம் இதோ

Toss

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி தற்போது நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் துவங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Pandey-1

தற்போது டாஸ் போடப்பட்ட நிலையில் பங்களாதேஷ் அணி டாஸில் வெற்றிபெற்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணியின் வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியில் ஒரு மாற்றம் உள்ளது என்று ரோஹித் அறிவித்தார்.

அதன்படி க்ருனால் பாண்டியா அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வலதுகை ஆட்டக்காரரான மணிஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே போன்று பங்களாதேஷிலும் ஒரு மாற்றம் இருந்தது அந்த அணியின் வீரரான மொசடெக் பதிலாக மிதுன் இன்றைய போட்டியில் களமிறங்குகிறார்.