கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் போன்ற லெஜண்ட்களின் வரலாற்று சாதனையில் இணைந்த ரோகித் சர்மா – விவரம் இதோ

Rohith-2

இந்தியா இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 15.4 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்தி தொடரை சமன் செய்தது.

ind 3

இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்றதன் மூலம் இந்திய அணியின் ஜாம்பவான்களான கவாஸ்கர் மற்றும் கபில்தேவ் ஆகியோரது சாதனையில் லெஜெண்ட் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது இந்திய அணிக்காக முதல் நபராக 100வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை சுனில் கவாஸ்கர் வைத்துள்ளார்.

அதற்கடுத்து முதல் இந்திய வீரராக 100வது ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை கபில்தேவ் வைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது முதல் நபராக 100வது டி20 போட்டியில் ஆடும் முதல் இந்திய வீரர் ஆக இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனை மூலம் தற்போது ரோகித் சர்மா லெஜன்ட் பட்டியலில் இனைந்துள்ளார்.

Rohith

டி20 போட்டியில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பட்டியலில் பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் 111 டி20 போட்டிகளில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது இடத்தில் ரோஹித் 100 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -