3 மாற்றங்களுடன் இந்திய அணியை அதிரடியாக அறிவித்த கோலி. முதலில் பேட்டிங் – 4 ஆவது டி20 அப்டேட்

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான நான்காவது போட்டி இன்று இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ளது.

Williamson

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் தற்போது போடப்பட்டுள்ளது. டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. அதற்கு பிறகு இந்த போட்டி குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் கோலி கூறியதாவது :

நாங்களும் இந்த போட்டியில் முதல் முதலில் பந்து வீச விரும்பினோம். ஏனெனில் இந்த மைதானம் சற்று சிறியதாக இருக்கிறது மேலும் பந்துவீசுவதற்கு ஏற்றதாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதைத்தான் சவுதியும் குறிப்பிட்டார். எது எப்படி இருப்பினும் இந்த போட்டியின் எங்கள் திட்டம் வெற்றி மட்டுமே.

Samson
இந்த போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் உள்ளன. வாய்ப்புக்காக காத்திருக்கும் சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சைனி ஆகியோர் அணியில் விளையாடுகின்றனர். ரோகித் சர்மா, சமி மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சாம்சன் துவக்க வீரராக ராகுலுடன் களமிறங்குவார் என்று கோலி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement