
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத் மைதானத்தில் சற்று நிமிடங்களுக்கு முன்னர் துவங்கியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும் என்ற எண்ணத்துடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடுவதால் இந்த போட்டியில் இரு அணிகளுக்குமே ஒரு முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்று முன்னர் நடைபெற்று முடிந்த டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரான் முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துணைக்கேப்டன் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்புவதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டாசிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேசுகையில் : இந்த போட்டி நிச்சயம் சவாலான ஒன்றாக இருக்கப் போகிறது. எப்போதுமே நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்பப்படுவோம். ஏனெனில் முதலாவதாக பேட்டிங் செய்து அதிக ரன்களை ஸ்கோர் போர்டில் அடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தோம் அந்த. வகையில் இந்த போட்டியில் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க : IPL 2022 : பாண்டியா தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு – எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே?
நிச்சயம் இந்த போட்டியில் நாங்கள் வெற்றி பெற முயற்சிப்போம். இப்போது அணியில் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன் குவிப்பை முதல் இன்னிங்சில் வழங்குவோம் என்று ரோகித் கூறினார். மேலும் அணியில் ஒரு மாற்றமாக கேஎல் ராகுல் இஷான் கிஷனுக்கு பதிலாக துவக்க வீரராக விளையாடுவார் என்றும் அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.