தோனியின் பிறந்தநாளை இவ்வாறு தான் கொண்டாடப்போகிறோம் – ரோஹித் கலக்கலான பேட்டி

Rohith-1
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்று கொடுத்துள்ளார் . இன்று அவருடைய பிறந்தநாள் இதனால் தற்போது தோனி வாழ்த்துமழையில் நனைந்து வருகிறார்.

Ziva

- Advertisement -

ரசிகர்கள் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் வீரரான ரோஹித் நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் பேட்டி ஒன்றினை அளித்தார். அப்போது தோனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து நகைச்சுவையாக பேசினார்.

எப்படி கொண்டாடப்போகிறீர்கள் என்ற நிருபரின் கேள்விக்கு ரோஹித் தோனியின் பிறந்தநாள் குறித்து கூறியதாவது : என்ன சொல்வது பிறந்தநாள் என்று என்ன சொல்லுவார்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தான் சொல்லுவார்கள். அதைத்தான் நாங்கள் சொல்ல முடியும் மேலும் தோனி பிறந்த நாளன்று நாளை மான்செஸ்டர் அல்லது பிர்மிங்ஹாம் பயணம் செய்து கொண்டிருப்போம். அப்போது கேக் வெட்டும் அந்த புகைப்படங்களை வேண்டுமானால் உங்களுக்கு தருகிறோம் என்று நகைச்சுவையான பதிலளித்தார்.

இந்த பதிலைக் கேட்டதும் அங்கிருந்த நிருபர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்கினர். கலகலவென்று தோனியின் பிறந்தநாள் குறித்து பேட்டி அளித்து அவர்களிடமிருந்து விடை பெற்றார் ரோஹித்.

Advertisement