மைதானத்தில் ஹர்பஜனை நினைவுக்கு கொண்டுவந்த ரோஹித் – எப்படி தெரியுமா ?

Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இன்று நடந்து முடிந்த நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாபிரிக்க அணி 1 விக்கெட்டை இழந்து 11 ரன்களை அடித்துள்ளது. அந்த அணியின் வெற்றிக்கு இன்னும் 384 ரன்கள் தேவை நாளை போட்டியின் முடிவு தெரிந்துவிடும்.

- Advertisement -

இந்நிலையில் இன்று மைதானத்தில் சுவாரசியமான நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. அந்த நிகழ்வு யாதெனில் தென்னாபிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது இந்திய அணியின் வீரரான ரோஹித் சர்மா ஹர்பஜன் பந்துவீசுவதற்கு முன்பு எப்படி தயார் படுத்தி கொள்வாரோ அதனை போன்று செய்துகாட்டினார்.

அவர் எதேர்ச்சையாக செய்த செயலை தற்போது விடியோவாக ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் இரு இன்னிங்சிலும் ரோஹித் சதமடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement