- Advertisement -
ஐ.பி.எல்

Rohith Sharma : ஸ்டம்பை பதம் பார்த்த ரோஹித் சர்மாவிற்கு அபராதம் விதித்து அதிரடி காட்டிய – ஐ.பி.எல் நிர்வாகம்

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் நேற்று மாத்தி மாத்தி அடித்து துவைத்தனர். கில் 45 பந்துகளில் 76 ரன்களையும், லின் 29 பந்துகளில் 54 ரன்களையும், ரசல் 40 பந்துகளில் 80 ரன்களையும் அடித்தனர்.

- Advertisement -

பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் வந்த ஹார்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்தார். அதனால் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இரண்டாவதாக இமாலய இலக்கினை எதிர்த்து ஆடிய மும்பை அணி போராடி தோற்றது. இந்த போட்டியின் ஆரம்பத்திலே ரோஹித் சர்மா எல்.பி மூலம் ஆட்டம் இழந்தார். இந்த விக்கெட்டினை எதிர்பார்க்காத ரோஹித் வெறுப்படைந்து ஆவேசத்துடன் ஸ்டம்பை பேட்டால் இடித்தார். இந்த செயல் விதிமுறைகளை மீறிய செயலாகும் மைதானத்தில் இதுபோன்று அவதூறாக நடக்கக்கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்தது.

அதன்படி போட்டி ஊதியத்திலிருந்து ரோஹித் சர்மாவுக்கு 15% அபராதம் விதிக்கப்பட்டது. ஏற்கனவே அம்பயருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், மெதுவாக பந்துவீசியதற்காகவும் ரோஹித்க்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by