ஒருநாள், டி20, டெஸ்ட் என மூணுத்திலுமே ரோஹித்தான் இந்த விடயத்துல டாப் பிளேயராம் – சூப்பரா இருக்கே

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் கடைசி நாளான இன்று தற்போது தென்னாபிரிக்கா அணி 70 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

Rohith

- Advertisement -

இன்னும் சிறிது நேரத்தில் இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்த போட்டியின் மூலம் ஒரு அரிய வகை சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார். அந்த சாதனை யாதெனில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் 13 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் டெஸ்ட் போட்டியிலும் ஒரே போட்டியில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Rohit-2

ஒருநாள் போட்டி – 16 சிக்சர்கள்

- Advertisement -

டி20 போட்டி – 10 சிக்சர்கள்

டெஸ்ட் போட்டி – 13 சிக்சர்கள்

எனவே தற்போது மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பெருமை ரோகித் சர்மா தன் வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement