வேறுயெந்த இந்தியரும் செய்யாத சாதனையை படைத்த ரோஹித் அபாரம் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நேற்று மும்பை வாங்கடே மைதானத்தில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

Rohith

நேற்றைய போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் அதிரடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பவுண்டரி மற்றும் சிக்ஸர் என இவர்கள் அடித்து நொறுக்க இந்திய அணியின் ரன் வேகம் ஆரம்பத்திலேயே அதிகரித்தது.

மூன்றாவது ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா சிக்ஸ் அடித்து தனது சிக்சரின் எண்ணிக்கையை துவங்க அது அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸராக அமைந்தது. அதனால் சர்வதேச அளவில் 400 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். ரோஹித் சர்மாவுக்கு அடுத்து சிக்ஸர்கள் பட்டியலில் 35 சிக்ஸர்களுடன் தோனி இரண்டாவது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலக அளவில் அதிக சிக்சர்களை அடித்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 404 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரண்டு இடங்களில் கெயில் மற்றும் அப்ரிடி ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளை பொருத்தவரை ரோஹித் 116 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -