இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59.1 ஓவர்களில் 202 ரன்களை குவித்தது. இந்நிலையில் மைதானத்தில் பெய்த மழை காரணமாக முதலாம் நாள் ஆட்டநேர முடிவுக்கு வந்தது என்று அம்பயர்கள் அறிவித்தார்கள்.
பயிற்சி போட்டியில் டக் அவுட் ஆன ரோகித் சர்மாவை பலரும் விமர்சித்து வந்தாலும் இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ரோகித் சர்மா 174 பந்துகளை சந்தித்து 115 ரன்கள் குவித்தார் இதில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.

இதன் மூலம் தான் ஒருநாள் போட்டியில் மட்டும் தான் சிறப்பான வீரர் அல்ல டெஸ்ட் போட்டியில் என்னால் அதிரடியாக ஆட முடியும் என்று சிறப்பான ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளார். கோலி கூறியதுபோல ரோஹித் சிறப்பாக விளையாடும் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் வலுப்படும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.



