காயம் எல்லாம் மேட்டர் இல்ல. ரோஹித் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்க்கு காரணம் இதுதானம் – கோலி போட்டுள்ள ஸ்கெட்ச்

Rohith

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா நீக்கப்பட்டது ஏனென்று புதிய காரணத்தைச் சொல்லி இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். கடந்தவாரம் ஆஸ்திரேலியா சுற்று பயனத்திற்கான மூன்று விதமான போட்டிகளுக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு அணியிலும் கூட ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை.

INDvsAUS

இந்த அணி அறிவிக்கப்பட்டதற்கு சில தினங்களுக்கு முன்னர் ரோகித் சர்மா காயம் அடைந்து விட்டதாக மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு ஓய்வு கொடுத்திருந்தது. தொடர்ந்து நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக அணியில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது. உடனடியாக பிசிசிஐ மருத்துவ குழுவினரை அனுப்பி  அவரது காயம் குறித்து விசாரித்து அறிக்கை அனுப்பியது.

மேலும் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய ரோஹித் சர்மா என்னுடைய காயம் தற்போது சரியாகி விட்டது, எனக்கு பிரச்சனை இல்லை என்று கூறியிருந்தார். தொடர்ந்து ரோகித் சர்மா அணியில் சேர்க்கப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

rohith 2

ஆனால் ரோகித் சர்மா ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறித்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியதாவது… ரோகித் சர்மா லாக் டவுன் காலத்தில் தனது உடல் எடையை கூட்டி விட்டார். இதனை வைத்து ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அப்போது கலாய்த்துக் கொண்டு இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். விராட் கோலி தனது அணியில் உடல் தகுதி கொண்ட வீரர்களை மட்டும் தான் தேர்வு செய்கிறார்.

- Advertisement -

இதனை காரணம் காட்டி தான் ரோகித் சர்மாவை அணியிலிருந்து நீக்கி இருக்கிறார். கண்டிப்பாக உடல் தகுதி இல்லாததன் காரணமாக தான் ரோஹித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். என்று பேசி சிண்டு முடிந்து விட்டிருக்கிறார் மைக்கேல் வாகன். இவர் சொல்வதும் கிட்டத்தட்ட உண்மைதான். ஏனெனில் ரிஷப் பந்த் இந்த காலகட்டத்தில் தனது எடையை கூட்டி விட்டார். இதன் காரணமாக அவருக்கு காயமானது.

rohith

இதனால் டெஸ்ட் போட்டியில் மட்டுமே அவர் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தான் ரிஷப் பந்த் நன்றாக விளையாடுவார் இருந்தும் உடல் எடையை கூட்டியதால் அவரை அணியில் இருந்து நீக்கி இருக்கிறார் விராட் கோலி.