ரோஹித்தின் காயம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்த கோலி – அடுத்த போட்டியில் விளையாடுவாரா ?

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 340 ரன்கள் குவித்து பெரிய இலக்கினை ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயித்தது.

dhawan 3

அதன்படி தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 304 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது இதனால் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்று தொடரை சமன் செய்தது. முதல் போட்டியில் அவர்களின் 10 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாத இந்திய அணி நேற்று அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் துவக்க வீரரான ரோஹித் பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது பவுண்டரி லைனில் பந்தினை தடுக்கும் போது கீழே விழுந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. பிறகு ரோஹித் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். போட்டி முடிந்து ரோஹித்தின் காயம் குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது :

rohith 1

இந்த போட்டியில் துவக்கவீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். ரோஹித்துக்கு இந்த போட்டியின்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயத்தின் தன்மை அதிகமாக இல்லை அடுத்த இறுதி போட்டிக்குள் அவர் குணமாகிவிடுவார் என்று நம்புகிறேன் என்று கோலி கூறினார்.

Advertisement