3 ஆவது அம்பயரை அசிங்கமாக திட்டிய ரோஹித் சர்மா. நேற்றைய போட்டியில் இதை கவனித்தீர்களா ? – விவரம் இதோ

Rohith-5

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

Dhawan

அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 85 ரன்கள் குவித்து அதன் மூலம் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா மூன்றாவது அம்பயரை திட்டிய விடயம் தற்போது தீயாக பரவி வருகிறது. அதன்படி இந்த போட்டியில் லிட்டன் தாஸை ஸ்டம்பிங் செய்த பண்ட் ஸ்டம்பிற்கு முன்பே பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்தார் என்ற காரணத்தினால் மூன்றாவது அம்பயர் அதற்கு நாட் அவுட் கொடுத்தார். பிறகு மீண்டும் விளையாடிய போது அதே போன்று ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை இந்த முறை சவுமியா சர்க்கார்க்கு எதிராக பண்ட் சரியாகவே செய்தார். இருப்பினும் அவர் ஸ்டம்பிற்கு முன்னால் பந்தை பிடித்தாரா ? இல்லை பின்னால் பந்தை பிடித்தாரா ? என்ற சந்தேகத்தின் அடிப்படியில் மூன்றாவது அம்பயர் அந்த ஸ்டம்பிங்கை வீடியோ மூலம் சரி பார்த்தார்.

Rohith 6

அப்போது இந்த முறையும் சவுமியா சர்கார் அவுட் இல்லை என்று திரையில் நாட்அவுட் என்று வந்தது. உடனே அதனை கண்ட ரோகித் சர்மா மூன்றாவது அம்பயரை நோக்கி ஹிந்தியில் அசிங்கமாக திட்டினார். உடனே திரையில் மீண்டும் அவுட் என்று முடிவு வெளியானது. டெக்னிக்கல் கோளாறு காரணமாக முதலில் நாட் அவுட் கொடுத்த மூன்றாவது அம்பயர் அதனை திருத்தி அவுட் என்று அறிவிப்பதற்குள் ரோகித் சர்மா அவரை திட்டி விட்டார் இந்த விடயம் தற்போது இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -