கெயில் மற்றும் அப்ரிடியை தொடர்ந்து இமாலய சாதனையை படைக்கவுள்ள ரோஹித் – விவரம் இதோ

Rohith-1

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நாக்பூர் விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Dhawan

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்து மற்றொரு இமாலய சாதனை படைக்க உள்ளார். இந்த சாதனையை இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்த வீரர்களாக பாகிஸ்தான் அணியின் ஷாகித் அப்ரிடி(476) மற்றும் விண்டீஸ் வீரர் கெயில்(534) ஆகியோர் இருவர் மட்டுமே இருக்கின்றனர்.

இதுவரை இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் 232 சிக்சர்கள், டெஸ்ட் போட்டிகளில் 51 சிக்சர்கள் மற்றும் டி20 போட்டியில் 115 சிக்சர்கள் என மொத்தம் 398 சிக்சர்களை இந்திய அணிக்காக அடித்துள்ளார்.

Rohith-1

இந்நிலையில் இன்றைய போட்டியில் 2 சிக்சர்களை ரோகித் சர்மா அடித்தால் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு 400 சிக்சர்களை அடித்த மூன்றாவது வீரராக சாதனை படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நிச்சயம் அவர் இன்று நடக்கவிருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்த சாதனையை படைப்பார்.

- Advertisement -