- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அரையிறுதியில் சச்சினின் சாதனையை அடித்து நொறுக்க உள்ள ஹிட்மேன்

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் வரும் ஒன்பதாம் தேதி அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். 9 போட்டிகளில் 5 சதங்கள் அடித்த உடன் 647 ரன்கள் குவித்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

இதுவரை உலகக்கோப்பை தொடரில் தனிநபர் அதிகபட்சமாக ஒரு தொடரில் 673 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன் குவிப்பாக உள்ளது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சச்சின் இந்த சாதனையை படைத்தார். இப்போது நடப்பு உலகக்கோப்பை தொடரில் ரோஹித் 647 ரன்கள் குவித்துள்ளார்.

சச்சின் சாதனையை முறியடிக்க ரோஹித்துக்கு இன்னும் 26 ரன்களே தேவை என்பதால் 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை அவர் படைப்பார் என்று உறுதியாக நம்பலாம். மேலும், இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினையும் ரோஹித் தட்டிச்செல்ல பிரமாதமான வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by