கோலியின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்க இருக்கும் ரோஹித் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை டெல்லி மைதானத்தில் துவங்க இருக்கிறது. காற்று மாசுபாடு பிரச்சனை காரணமாக போட்டி நடைபெறுமா என்று சந்தேகம் எழுந்த நிலையில் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று கங்குலி நேற்று தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரு அணி வீரர்களும் முக கவசம் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த போட்டி நாளை துவங்க உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா புதிய உலக சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.

அதாவது டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 67 போட்டிகளில் 2450 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா தற்போது 90 போட்டிகளில் விளையாடி 2443 ரன்களுடன் உள்ளார். மேலும் 7 ரன்களை இன்று ரோகித் சர்மா அடிக்கும் பட்சத்தில் கோலியின் சாதனையை அவர் படைப்பார்.

rohith

இருப்பினும் ரோஹித்தை விட கோலி 23 போட்டிகள் குறைவாக விளையாடி இவ்வளவு ரன்கள் அடித்துள்ளார். எனவே விரைவில் மீண்டும் ரோஹித்தை கோலி முந்த அதிக வாய்ப்புள்ளது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோஹித் இந்த தொடரிலும் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -