MS Dhoni : தோனியின் சாதனையை இன்று தகர்க்க உள்ள ஹிட்மேன் – ரோஹித் சர்மா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை

Rohith
- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தி நான்கு வெற்றிகளையும், நியூசிலாந்துடனான மழையால் நின்ற போட்டியில் ஒரு டிரா என 9 புள்ளிகளில் உள்ளது.

rohith

- Advertisement -

இந்திய அணி அடுத்ததாக 27ஆம் தேதி இன்று மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இன்று நடைபெற உள்ள போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் தோனியின் ஒரு பெரிய சாதனையை ரோஹித் முறியடிக்க உள்ளார்.

அதன்படி இன்றைய போட்டியில் ரோகித் சர்மா தோனியின் சிக்சர் சாதனையை முறியடிப்பார் என்று தெரிகிறது. ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பாக தோனி இதுவரை 345 போட்டிகளில் பங்கேற்று 225 சிக்சர்களை அடித்து உள்ளார். ஆனால் ரோகித் சர்மா 210 போட்டியில் பங்கேற்று 224 சிக்ஸர்களை அடித்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 2 சிக்சர்களை அடிக்கும் பட்சத்தில் இந்திய அணியின் சார்பாக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் 4 ஆவது அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையினையும் ரோஹித் பெறுவார்.

rohith

மேலும் ஒட்டுமொத்தமாக தோனி அடித்த சிக்சர்களை ஏற்கனவே ரோகித் சர்மா முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இதுவரை தோனி (ஒருநாள், டி20, டெஸ்ட்) ஆகிய மூன்றையும் சேர்த்து 355 சிக்சர்களை எடுத்துள்ளார். ரோகித் சர்மா 358 சிக்சர்களை அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் சர்வதேச அளவில் சாகித் அஃப்ரிடி 350 ஒரு சிக்சரை அடித்து முதல் இடத்தில் உள்ளார். கெயில் 324 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார். ஜெயசூர்யா 270 சிக்சர்களை அடித்து மூன்றாவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்த இடங்களில் 225 தோனி மற்றும் 224 ரோஹித் ஆகியோர் உள்ளனர்.

Advertisement