தோனியை இன்றைய போட்டியின் மூலம் பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்த இருக்கும் ரோஹித் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் கோலி விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக ரோஹித் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Ind

இந்நிலையில் இந்த தொடரில் ரோகித் சர்மா இந்தியாவின் முன்னணி வீரரான தோனியின் சாதனையை முறியடிக்க உள்ளார். அதன்படி இந்திய அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை தோனி இதுவரை தன்வசம் வைத்துள்ளார். தோனி 98 சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

ரோஹித்தும் 2007 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 98 விளையாடி உள்ளார். இன்று வங்கதேச அணிக்கு எதிராக அவர் விளையாட இருக்கும் முதலாவது டி20 போட்டி மூலம் தோனியை கடந்து தனது 99 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி அதிக டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார்.

rohith 1

மேலும் உலகஅளவில் அதிக டி20 போட்டிகளில் பங்கேற்ற 3 ஆவது வீரர் என்ற சாதனையும் நிகழ்த்த உள்ளார். இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த சோயிப் மாலிக் (111), அப்ரிடி (99) போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -