டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு. யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்த ரோஹித் – விவரம் இதோ

Toss

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ban 2

இந்நிலையில் ராஜ்கோட் இரண்டாவது டி20 போட்டி தற்போது துவங்கவுள்ளது. டாஸ் போடப்பட்ட பின் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளார். எனவே தற்போது இந்திய அணி பீல்டிங் செய்ய தயாராகி வருகிறது. மேலும் டாஸ் போடப்பட்ட பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் கூறியதாவது :

இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த டெல்லி டி20 போட்டியில் விளையாடிய அதே அணி இன்றைய போட்டியிலும் விளையாட இருக்கிறது என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நேரத்தில் போட்டி துவங்க உள்ளது. ரோஹித்தின் இந்த அணித்தேர்வு அனைவர்க்கும் ஆச்சரியமாக இருந்தது.

Ind-2

ஏனெனில் கடந்த டெல்லி போட்டியில் இந்திய அணி எதிர்பார்த்த விதமாக மோசமாக விளையாடி தோல்வியை சந்தித்ததால் இந்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரோஹித் இந்த போட்டியில் எந்தவித புதிய முயற்சியையும் கையில் எடுக்காமல் அதே அணியுடன் ஆடுவது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

- Advertisement -