தென்னாபிரிக்க அணிக்கு எதிராக ரோஹித் சர்மா துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு – விவரம் இதோ

Rohith-1
- Advertisement -

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடரை வெற்றிகரமாக முடித்து அடுத்த தொடருக்காக தயாராகி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

Iyer-2

இந்த தொடருக்கான இந்திய அணியில் ராகுலுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் டி20 ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியின் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தேர்வுக் குழு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் முன்னணி வீரரான கங்குலி கூறியவையாவது : ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்கலாம் அவருக்கு அனைத்து தகுதிகளும் உள்ளன. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் களமிறங்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.

Rohith

இதன் முடிவில் இந்திய அணி இன்று தனது டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவிக்க உள்ளது. அதில் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement