இந்த தொடரை கைப்பற்றினாலும், அந்த கோப்பையை தவறவிட்டது கஷ்டமாக இருக்கிறது – ரோஹித் வேதனை

Rohith-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நிக்கலஸ் பூரன் 89 ரன்கள், பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் 74 ரன்களும் குவித்தனர்.

Ind

- Advertisement -

அதன்பிறகு 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சிறப்பாக விளையாடி 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக கோலி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 39 ரன்களுடனும் தாகூர் 17 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இந்திய அணி வெற்றிபெற வைத்தனர். ஆட்டநாயகனாக கோலியும் தொடர் நாயகனாக ரோஹித்தும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

போட்டி முடிந்து பேசிய தொடர்நாயகன் ரோஹித் கூறியதாவது : முடிவை தீர்மானிக்கும் இந்த இறுதிப்போட்டியில் வெற்றிபெற நினைத்தோம். அதிலும் குறிப்பாக கட்டாக் மைதானத்தில் வெற்றிபெற நினைத்தோம். இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானம் ஆனால் இந்த மைதானத்தில் என்னால் நீண்ட நேரம் பேட்டிங் செய்யமுடியவில்லை. ஆனால் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இறுதியில் ஷர்துல் புல்ஷாட் சிறப்பாக ஆடினார் அந்த சமயத்தில் தேவையான ஷாட் அது.

Jadeja

இந்த வருடம் சிறப்பாக சென்றது. ஆனால் ஒரே ஒரு வருத்தம் தான் உலககோப்பையை கைப்பற்றியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இந்த ஆண்டு எனது சிறப்பான ஆட்டத்தை விளையாடினேன் அதனை வரும் வருடமும் தொடர விரும்புகிறேன். என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருக்கிறது அதனை அறிந்து போட்டிகளில் அதனை எவ்வாறு செயப்படுத்தவேண்டும் என்பதே எனது திட்டம்.

Rohith

வெளிநாட்டு தொடர்களின் போது சவால்கள் வருகிறது. இனி அவ்வாறு வரும் சவால்களை எதிர்த்து போட்டிகளை வென்று எப்போதும் டாப்பாகவே இருக்கவேண்டும் என்று ரோஹித் கூறினார்.

Advertisement