என் வாழ்நாளில் இத்தனை நாட்கள் நான் பேட்டை தொடாமல் இருந்ததில்லை – இந்திய முன்னணி வீரர் உருக்கம்

Ind

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் மற்றும் இங்கிலாந்து அயர்லாந்து அணிகளுக்கிடையிலான தொடர் நடந்து முடிந்துள்ளது.

rohith 1

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பல பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது “ஈ.எஸ்.பி.என் கிரிக்இன்போ” என்ற இணைய தளத்திற்கு பேட்டியளித்துள்ள இந்திய அணியின் துவக்க வீரரும், துணைக்கேப்டனுமான ரோஹித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் அவர் கூறியதாவது : நான் கிரிக்கெட் விளையாட துவங்கியதிலிருந்து இத்தனை நாட்கள் கிரிக்கெட் பேட்டை தொடாமல் இருந்ததில்லை. இப்போது மீண்டும் போட்டிகள் துவங்கும் போது அது சவாலானதாக இருக்கும் எனக் கருதுகிறேன். ஏனெனில் கிரிக்கெட் விளையாடி விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவிற்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது.

Rohith-3

ஆனால் இந்த நான்கு மாதங்களாக உடல் ரீதியாக உறுதியாக இருக்கிறேன் என்று ரோகித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை. நான் பயிற்சியை மைதானத்திற்கு சென்று ஈடுபட இருக்கிறேன். அப்போதுதான் துபாயின் 40 டிகிரி வெயிலுக்கு விளையாட விளையாட பழகிக் கொள்ள முடியும். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான விடயம் கிடையாது என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் விளையாட இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நம்பிக்கை அதிகமாகும். இதற்கு முன்பு ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார் ரோஹித்.