கோலி மற்றும் கம்பீருடன் மகத்தான சாதனையில் இடம்பிடித்த ரோஹித் – விவரம் இதோ

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா முதல் முறையாக களம் இறங்கினார். அவர் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக ரோகித் சர்மா இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதத்தை அடித்ததில்லை அதனையும் இந்த தொடரில் அவர் செய்து காண்பித்தார்.

Rohith

- Advertisement -

அத்துடன் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் மூன்று போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக 529 ரன்கள் அடித்து தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் முன்பு 22 ஆம் இடத்தில் இருந்த ரோஹித் தற்போது 12 இடங்கள் முன்னேறி டெஸ்ட் பேட்ஸ்மேன் தர வரிசைப் பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடித்தார்.

இதன்மூலம் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை ஒரு நாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வகை கிரிக்கெட்டிலும் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி சார்பில் மூன்றுவகை கிரிக்கெட்டிலும் இந்த சாதனையை கோலி மற்றும் கம்பீர் ஆகியோர் செய்துள்ளனர்.

ஒருநாள் போட்டியில் தரவரிசையில் கோலிக்கு அடுத்து இரண்டாம் இடத்தை ரோஹித் வகிக்கிறார். அதேபோல டி20 யில் 7 ஆம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 10வது இடத்தை ரோகித் பிடித்துள்ளதால் கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவருக்கு பிறகு மூன்று வகையான கிரிக்கெட் போட்டியிலும் முதல் 10 இடங்களுக்குள் வந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

மேலும் புதிதாக வெளியாகியுள்ள டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நான்கு இந்திய வீரர்கள் முதல் 10 இடத்திற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி கேப்டன் கோலி 2 ஆவது இடத்திலும் புஜாரா 4வது இடத்திலும், ரகானே ஐந்தாவது இடத்திலும் மற்றும் ரோஹித் சர்மா 10வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement