இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி பெங்களூரு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தவான் 36 ரன்கள் குவித்தார் மற்றபடி இந்திய அணி வீரர்கள் ஒருவர்கூட 20 ரன்களை கடக்கவில்லை.
அதன் பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 16.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை தென் ஆப்பிரிக்கா அணி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த போட்டியில் முதலிடம் பிடித்த அவர் கொஞ்ச நேரத்தில் கோலி 9 ரன்கள் எடுத்து அவுட் ஆக அந்த சாதனையை கைவிட்டார். தற்போது கோலி 2450 ரன்களுடன் முதல் இடத்திலும், ரோகித் 2443 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சாதனையை முறியடிக்க தவறினாலும் இந்திய அணியின் முன்னணி வீரரான தோனியின் இமாலய சாதனையை நேற்று சமன் செய்துள்ளார்.
அந்த சாதனையை யாதெனில் தோனி இந்திய அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில்(98 போட்டிகள்) விளையாடிய வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்தார். அந்த சாதனையை நேற்று ரோகித் சர்மா(98 போட்டிகள்) அவருடன் பகிர்ந்து கொண்டார். நேற்றைய போட்டி ரோகித் சர்மாவின் 98 ஆவது சர்வதேச டி20 போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அடுத்த இடத்தில் சுரேஷ் ரெய்னா(78 போட்டிகள்), கோலி (72 போட்டிகள்) என அடுத்தடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.