உயிரை காப்பாற்ற 25 லட்சத்தை தூக்கிக் கொடுத்த ரோகித் சர்மா யாருக்காக எதற்காக கொடுத்தார் என்று தெரியுமா ?

Ritika
- Advertisement -

இந்திய அணியின் துவக்க வீரரான அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக அளவில் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். தற்போது இந்திய அணியின் முன்னணி வீரராக திகழும் இவர் டெஸ்ட் போட்டிகளிலும் துவக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார்.

rohith 3

- Advertisement -

இந்நிலையில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் செய்த காரியம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது யாதெனில் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரெய்னோ தினம் எனப்படும் காண்டாமிருகம் தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தையொட்டி ரோகித் சர்மா அது தொடர்பாக செய்தியை பகிர்ந்து அத்ததுடன் 25 லட்ச ரூபாய் நன்கொடையை அந்த அரிய வகை காண்டாமிருகம் அழியாமல் இருக்கவும், உயிரைக் காக்கவும் நன் கொடையாக அளித்துள்ளார்.

உலக காடுவாழ் உயிரினங்களுக்கான பவுண்டேஷன் மூலம் தனது நன்கொடை அளித்த ரோகித் சர்மா காண்டாமிருகத்தின் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது மிருகங்கள் உயிரினங்கள் மீதான அன்பை வெளிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement