ஒருநாள் போட்டிகளில் சச்சின் சாதனை முறியடித்த ரோஹித். ஆஸி அணிக்கு எதிராக அபாரம் – விவரம் இதோ

Rohith

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் குவித்தது.

Ind vs Aus

துவக்க வீரர்களான ரோகித் சர்மா 42 ரன்களும், தவான் 96 ரன்கள் குவித்தனர். அதன்பின்னர் கேப்டன் கோலி மீண்டும் மூன்றாவது வீரராக களமிறங்கி 76 பந்துகளில் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னரே இறுதி நேரத்தில் ராகுல் அதிரடியாக விளையாடி 80 ரன்களை குவிக்க இந்திய அணி 340 என்ற சிறப்பான ஸ்கோரை எட்டியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனையை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் தொடக்க வீரராக ஒருநாள் போட்டிகளில் விரைவாக 7000 ரன்களை குவித்த வீரராக ரோஹித் தனது முத்திரையை இன்று பதித்தார். மொத்தம் 137 இன்னிங்ஸ்களில் அவர் 7000 ரன்களை துவக்க வீரராக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Rohith

இதற்கு முன்னர் துவக்க வீரராக களமிறங்கி 7 ஆயிரம் ரன்களை விரைவாக இந்திய குவித்தவர் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் 160 இன்னிங்ஸ்களில் புடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச வீரர்கள் பட்டியலில் தென்ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர் ஹசிம் அம்லா 147 இன்னிங்சுகளில் 7000 ரன்களை குவித்திருந்தார் அந்த சாதனையும் ரோஹித் இன்று முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -