முதல் ஒருநாள் போட்டி : ரத்தக்காயம் ஏற்பட்டும் தொடர்ந்து விளையாடும் ரோஹித் – இப்படி ஒரு அர்பணிப்பா

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் முடிவைடைந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று புனே மைதானத்தில் துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் தொடங்கிய நிலையில் டாஸ் போடப்பட்ட பிறகு டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தது.

indvseng

- Advertisement -

அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியது உள்ளதால் பெரும் நம்பிக்கையுடன் இந்திய அணி இந்த போட்டியை எதிர்கொண்டுள்ளது.இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்பாக ஏற்கனவே இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதுபோல ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக இந்த போட்டியில் களம் இறங்கி விளையாடி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாகவே சிறப்பான துவக்கத்தை அளித்துவரும் இவர்களே துவக்க ஜோடியாக விளையாடுவார்கள் என்று கூறிவந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். துவக்கம் முதலே நிதானத்துடன் விளையாடி வரும் இந்த ஜோடி சிறப்பாக ரன்களை குவித்து வருகிறது.

8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை குவித்திருக்கும் இந்த ஜோடி நிதானமாக ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்த போட்டியின் ஐந்தாவது ஓவரை வீசிய இங்கிலாந்து அணியின் வீரர் மார்க் வுட் வீசிய பந்தில் கையில் அடிபட்ட ரோஹித் ரத்த காயத்துடன் போட்டியை தொடர்ந்து விளையாடி வருகிறார்.

dhawan

மார்க் வுட் வீசிய அதிவேக பந்து ரோஹித்தின் கையில் பட்டதுமே பெரிதாக வீங்கிய இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டது. இப்படி ரத்தக்காயம் ஏற்பட்டும் மைதானத்தில் இருந்து வெளியேறாமல் உடனே முதலுதவி பெற்ற ரோகித் சர்மா அந்த காயத்தின் மீது ஒரு பெரிய பேண்டேட் ஒட்டிக்கொண்டு தொடர்ந்து விளையாடி வருகிறார். அவரின் இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement