தோனி மற்றும் கோலி ஆகியோரது சாதனையை நேற்றைய ஒரே போட்டியில் தகர்த்த – ரோஹித் சர்மா

Rohith-1
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்திய அணியுடனான 3 டி20 போட்டி கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது. நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையே ஆன முதலாவது டி20 போட்டியில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார சாதனை படைத்தது.

ind 3

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய வீரர்களான கோலி மற்றும் தோனி ஆகியோர் சாதனையை முறியடித்தார். அதன்படி தோனிக்கு இணையாக ரோகித் சர்மா இதுவரை 98 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்தார். நேற்றைய போட்டி மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையை 99 போட்டிகளுடன் அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதிக டி20 போட்டிகளில் பங்கேற்ற சர்வதேச வீரராக மூன்றாவது இடத்தில் ரோகித்சர்மா உள்ளார். இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த மாலிக் 111 போட்டிகளிலும், அப்ரிடி 99 போட்டிகளிலும் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு சாதனையும் நேற்று ரோகித்சர்மா முறியடித்தார். அது யாதெனில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி டி20 போட்டிகளில் இதுவரை 2450 ரன்களை அடித்து இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்திருந்தார்.

Rohith

அதனை நேற்று 9 ரன்கள் அடித்ததன் மூலம் 2452 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை படைத்தார். இந்த தொடரில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா மேலும் ரன்கள் அடிக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து நடைபெறவிருக்கும் இரண்டாவது டி20 போட்டியில் ரோகித் சர்மா இந்தியா சார்பாக நூறாவது டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement