இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது. நான்காவது நாள் உணவு இடைவேளை முடிந்து தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. அகர்வால் 7 ரன்களில் ஆட்டமிழக்க ரோகித் சர்மா தற்போது அரைசதம் அடித்து விளையாடி வருகிறார்.
இந்திய அணி இதுவரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 114 ரன்களை இரண்டாவது இன்னிங்சில் அளித்துள்ளது. எனவே இந்திய அணி தற்போது 185 ரன்கள் முன்னிலையில் உள்ளது மேலும் நாளை ஒருநாள் மட்டுமே போட்டி உள்ளதால் இன்று இந்திய அணி பெரிய ஸ்கோரை அடித்து தென்னாப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய பணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சிறப்பான சம்பவம் ஒன்று இந்த போட்டியில் நடைபெற்று உள்ளது. அதை பெருமளவு யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள் அதுயாதெனில் இந்திய அணியின் வீரரான ரோகித் ஷர்மா பந்துவீசுவதை இதுவரை அதிகளவில் பார்த்திருக்க மாட்டீர்கள். நேற்று 2 ஓவர்கள் வீசினார் ரோஹித் அந்த சம்பவம் நேற்று ரசிகர்களை வியப்படையவைத்தது.
அதிலும் சிறப்பானா விடயம் யாதெனில் ஒரு மெய்டன் ஓவர் வேற அவர் வீசியது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 2 ஓவர்கள் வீசி மொத்தம் 7 ரன்கள் கொடுத்தார். ரோஹித் ரசிகர்கள் அவர் வந்து விஷயம் வீடியோவையும் தற்போது இணையத்தில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.